ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
- Advertisement -

அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன் பொலிஸ் அரணை மோதிய மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் லொறியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.