அரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் தள்ளியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய செயற்றிட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் ஊழல் மற்றும் மோசடி ஆகியன அதிகரித்துள்ளன. இந்நிலையில் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நீண்டுக்கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் அதன் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த அனைத்து மக்களினதும் அபிலாசைகளை படுகுழிக்குள் தள்ளியுள்ளது.
- Advertisement -
பொய்களை பரப்புவதன் ஊடாக மக்கள் எதிர்ப்பை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் அதற்கான தீர்வுகளை தேடுகிறது. மேலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அரசாங்கத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்களும் கூட்டங்களும் நடந்துள்ளன என்ற ஆதாரமற்ற செய்திகளை உருவாக்குவது அரசாங்கத்தின் குறைந்த மனநிலைமையை காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.