அமெரிக்க மாநிலமான ஜோர்ஜியாவில் ஸ்பாக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 21 வயதுடைய இளைvbnbvdgஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொdggtyலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேர் கொரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலுக்கு ஆசிய – அமெரிக்கர்களே காரணம் என தெரிவித்து அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த வராம் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், ஆசிய-அமெரிக்கர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.