காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
- Advertisement -

நேற்று காலை தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ “விரைவாக வடக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து என்னை நேரில் வந்து சந்திக்குமாறு” அறிவுறுத்தியுள்ளார்.
- Advertisement -
அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.