எங்கு அடக்கப்படுகின்றீர்களோ? அங்கு கிளர்ந்து எழவேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற மdffhgrrகளிர் தின நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

நான் பல அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். ஒரு பெண் அரச நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய போது பெண்களினுடைய உரிமைகள் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
அவற்றுக்காக நான்குரல் எழுப்பி பழிவாங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. நான் அரசாங்க அதிபராக இருந்த போது அந்த விடயங்கள் இடம்பெறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நிர்வாக சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் அனைத்து அதிகாரிகளும் எந்த இடத்திலும், எந்தப் பகுதியிலும் கடமையாற்ற வேண்டும்.
ஆனாலும் சில அரசாங்க அதிபர்கள் இந்த பதவி பெண்ணால் வகிக்க முடியுமா என்று கேட்ட சந்தர்ப்பங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அவை தான் எனக்கு சவால்களாக மாறி சாதனைகளாக மாறியது என்பது தான் உண்மை.
அந்த அரசாங்க அதிபர்களும், நானும் ஒரே மாநாட்டில் கலந்து கொண்ட போது நான் பேசியதைப் பார்த்து திகைத்து போய் நின்ற சம்பவங்களும் உண்டு. எங்கு அடக்கப்படுகின்றீர்களோ, எங்கு உங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ, எங்கு நீங்கள் தடுக்கப்படுகின்றீர்களோ அங்கு தான் நீங்கள் கிளர்ந்து எழ வேண்டும். அங்கு தான் உங்களுக்கு சாதனைகள் இருக்கும். கடமைகளை சரியாகச் செய்கின்ற போது பதவிகள் தானாகவே தேடி வரும் என்றார்.