தமிழ் , சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
- Advertisement -

கொவிட்-19 வைரஸ் தொற்று இன்னும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தமிழ் -சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.