இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா சபையின் ஆப்கானிஸ்தான் உதவி மிஷன் திட்டத்தின், சிறப்பு பிரதிநிதியான டிபோரா லியான்ஸ் ஆகியோர் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் சீனாவும் குறிப்பிட்ட அளவிலான தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இந்தியாவின் ஐ.நா. தூதுவர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவிக்கையில்,

ஆப்கானிஸ்தானில் பேரிடர் கால உணவு பாதுகாப்பின்மை ஏற்படக்கூடாது எனும் நோக்கில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் கோதுமையை வழங்கி உள்ளது. மேலும் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள, 9 லட்சத்து 68 ஆயிரம் டோஸ் அளவு கோவேக்சின் தடுப்பூசியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க சம்மதித்துள்ளது. இதில் 5 லட்சம் டொஸ்கள் இந்தியா மானியமாக வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 56 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 466 பேர் உயிரிழந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.