இந்தியாவில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால், பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்தில் அதிக மூதலீடுகள் செய்யப்பட்டதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
- Advertisement -
தொழில்துறை தேக்கத்தால் பொருளாதார பாதிப்பு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இதற்கிடையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
- Advertisement -

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இந்தியவின் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்து 33, 880 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.4, 235 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.