இந்தியாவை கடுமையாக விமர்சிப்பது இலங்கைக்கு மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் என வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா என்பது இலங்கையின் நட்பு நாடு.ஜெனீவாவில் இந்தியா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் நாடு தற்போது சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சி இந்தியாவை கடுமையாக விமர்சிப்பது இலங்கைக்கு மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியாவால் இலங்கைக்கு தொடர்ந்தும் சோதனைதான் என அரசின் பங்காளி கட்சியான அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.