தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவை மற்றும் அத்துருகிரியவிற்கு இடையில் இன்று இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மோட்டார் வாகனம் முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது தொடர்பாக பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுவருகின்றனர்.