உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவரின் தந்தை ஜேவிபியின் தேசிய பட்டியலில் காணப்பட்டார். இது குறித்து ஜேவிபி தலைவர் அநுர குமார திஸநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெறும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
- Advertisement -
சஹ்ரான் ஹாசிமின் கொள்கைகளை ஜேவிபி ஏற்றுக்கொள்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- Advertisement -

ஜேவிபியின் பிமல் ரட்நாயக்க பழங்குடியினத்தவர்களே சிலைகளை வழிபடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். சஹ்ரான் ஹாசிம் போன்ற அடிப்படைவாதிகளும் சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்களை கொண்டுள்ளதால் ஜேவிபியிடமும் அதே கொள்கைகள் உள்ளனவா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. ஜேவிபியின் மக்கள் ஆதரவு குறைவடைந்துள்ளது எதிர்காலத்தில் மக்கள் அவர்களை ஆதரிக்கமாட்டார்கள் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.