இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தடுப்பூசி ஒப்பந்தத்தை பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசிக்கு இலங்கையில் வழங்கப்பட்ட அவசரகால அனுமதி பிற்போடப்பட்டது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இந்த தகவலை தம்மிடம் கூறியதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இதன் விளைவாக, சீனா நன்கொடையாக வழங்க வேண்டிய சுமார் 600,000 டோஸ் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சீனாவின் தடுப்பூசிக்கு இலங்கையில் ஒப்புதல் அளிக்க சீனா இலங்கை மீது அழுத்தம் கொடுத்து வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும், சீனாவிலிருந்து வரும் நன்கொடைகள் இலங்கையை தளமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான சீன நாட்டினருக்கு போட மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.