பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் தலைமையில் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
- Advertisement -

இதன்போது, குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் சரிந்து வீழ்ந்துள்ள கல்லை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறும், மாகாணத்தினுள்ளே மேலும் இதுபோன்ற அபாயகரமான இடங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு உடனடியாக தீர்சினை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -
இந்த கோர விபத்துடன் தொடர்புடைய அனைவருக்கம் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.