இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
- Advertisement -

இந்தநிலையில் அதிகளவில் தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற ஏனைய பகுதிகளிலும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் தடவையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் இரண்டாவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.