இரத்மலானை பகுதியில் காணாமல் போன 16 வயது மாணவர் காணாமல் போன விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த மாணவன் நேற்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் காணாமல் போனமைக்கான காரணத்தை அவரது தாயார் வெளியிட்டுள்ளார்.
- Advertisement -

அந்த வகையில் தனது மகன் தனியாக இருக்க விரும்புவதாக நினைத்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக தாயார் தெரிவித்தார். குறித்த மாணவன் வீடு திரும்பிய பின் தனது தாயாரிடம் இதை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் வீடு திரும்பிய பின்னர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த மாணவன் வீட்டின் அருகிலேயே இருந்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் தாய் கூறினார்.