பதுளை – பசறை பகுதியில் ஏற்பட்ட பயங்கர பஸ் விபத்தில் தப்பி ஓடிய டிப்பர் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில் 45 வயது சந்தேகநபரை பசறை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த டிப்பரில் மணல் கொண்டு செல்வதும் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் குறித்த பஸ்ஸூம் டிப்பர் வண்டியும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தமை சிசிடிவி கெமராவில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் குறித்த டிப்பர் வண்டியின் சாரதி தப்பி ஓடிய நிலையில் விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் வண்டியின் சாரதி மது போதையில் இருந்தாரா என்பதை பரிசோதிப்பதற்காக இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.