சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பியின் கோரிக்கைகள் வலியுறுத்தப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, ஜெயபுரம் கிராமத்தில் வன வளப் பாதுகாப்புத் திணைக்களதிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வயல் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில், இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
- Advertisement -
மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தertybvமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண முடியும் என்ற ஈ.பி.டி.பி. இன் நீண்ட கால வலியுறுத்தல் தற்போது சர்வதேச தளங்களில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. தffgeமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாகாண சபை முறைமையை பூரணமாக அமுல்படுத்த வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அண்மைய அமர்வுகளில் இந்தியாவினால் வலியுறுத்தப்பட்டது என்றார்