இந்தியாவின் தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இரண்டு குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் அங்குள்ள குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வேதா என்ற மனைவியும், நிஷிகேத் (வயது 9), நிஹல் (5) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
.இந்நிலையில் குழந்தைகளுக்கு , சிகிச்சை அளித்தும் குணமாகாததால் சதீஷ் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகின்றது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.