ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் விதத்தில் தண்டனைச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹவார்ட் பல்கலைகழகம் ஏற்பாடு செய்த மெய்நிகர் கலந்துரையாடலின் போது கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எல்ஜிபிடி சமூகத்தினர் உரிமை தொடர்பான முதலாவது கேள்விக்கு பதிலளிப்பது என்றால் எங்களின் தற்போதைய சட்டத்தின்படி ஓரினச்சேர்க்கை என்பது இலங்கையின் தண்டனைச்சட்டத்தின் கீழ் குற்றமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் நான் அறிந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியல்வாதிகள் குழுவொன்று இது குறித்து ஆராய்கின்றது. அவர்கள் தண்டனைச்சட்டத்தின் கீழ் இதனை குற்றமற்றதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என்பது எனக்கு தெரியும் ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் சட்டமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.