நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய, எரிபொருள் விநியோகம் நிறைவடைந்த பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் QR குறியீட்டு முறைமைக்கு அமைய மாத்திரம், எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
எவ்வாறாயினும், இன்றைய தினம் வாகன இலக்கத் தகட்டின் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய இறுதி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்காக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது -என்றார்.