தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார்.
- Advertisement -
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டது மட்டுமின்றி விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டு வருகின்றனர்.
- Advertisement -
அந்த வகையில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.
இதனிடையே தற்போது தளபதி விஜய் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் நடிகர் விஜய் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் புகைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.