யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
எனினும் யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரம் இத்தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
- Advertisement -
இதேவேளை இலங்கையில் இன்று மாலை 6 மணிவரை 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 107,406ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் நாட்டில் இதுவரை 530 பேர் இன்றுபூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது .