இந்தியாவில் கொரோனா வைரஸ் அவசரநிலைக்கு இடையில் பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது.
அத்துடன் மேற்கண்ட நாடுகளிலிருந்து அண்மையில் நாட்டுக்கு திரும்பி வந்த குடியிருப்பாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளையும் இத்தாலி கடுமையாக்கியுள்ளது.
- Advertisement -
ஏப்ரல் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய கட்டளை ஒன்றில், அந் நாட்டு சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தருவோருக்கானா தடையை நீட்டித்துள்ளார்.
புதிய சட்டத்தின் கீழ், இத்தாலியில் நிரந்தரமாக வாழும் இத்தாலிய குடிமக்கள் மட்டுமே மூன்று நாடுகளில் இருந்து நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.