கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி 29ஆம் திகதி மதியம் 1 மணிக்கு காணாமல் போயிருக்கிறார். அவர் தப்ஸ்கோட் சாலை மற்றும் மெக்லிவன் அவென்யூ பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.
- Advertisement -
தரணிதா ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இடது கையில் டாட்டூ குத்தியிருக்கும் தரணிதா காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.