மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பணிக்குச் செல்லும் பெண்களை ஏற்றிக்கொண்டு பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது, மடு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட்டதால், சாரதி பேருந்தை வீதியின் அருகாக செலுத்த முயற்சித்த போது பள்ளத்திற்குள் வீழ்ந்து குடைசாய்ந்துள்ளது.
குறித்த விபத்தில் அதிஸ்டவசமாக எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.