சுற்றாடல் அமைச்சரின் வினைத்திறனற்ற செயற்பாட்டை அடுத்து மத்திய சுற்றாடல் அதிகார சபையை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றாடல் மாசு மற்றும் அழிவு தொடர்பில் சமுகத்தில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது இருப்பதால் ஜனாதிபதி இந்ததீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -

ஜனாதிபதியின் இந்ததிட்டத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர இணக்கம் தெரிவித்துள்ளதுடன் தனக்கு வேறு அமைச்சு பதவி ஒன்றைத் தருமாறு கோரியுள்ளதாக தெரியவருகிறது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான மஹிந்த அமரவீர அண்மையில் தமது ஆதரவாளர்கள் கோரினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறத்தயார் எனவும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விமர்சனக் கருத்துக்களை வௌியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.