தbvnbjghjgnமிழ் மக்கள், தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை எவ்வாறு அபகரிக்கலாம் என்ற திட்டங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே நாம் பார்க்கின்றோம்.
- Advertisement -
ஆவணங்களை அனுராதபுரத்தில் வைத்துவிட்டு, தமிழ் மக்கள் தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை என்னவிதமாக அபகரிக்கலாம் என்ற திட்டங்களை வகுப்பதற்காக தான் குறித்த ஆவணங்கள் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.