புத்தளம் பாலாவி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிராந்துள்ளார். வீதியை கடக்க முற்பட்ட போது கார் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டையிலிருந்து அநுராதபுரம் சென்றவேளை புத்தளம் பாலாவி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.