கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆபத்தான வாகன விபத்துக்களால் 7 பேர் உயிரிழந்ததாகவும், இந்த வாரம் முழுவதும் மொத்தமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -

இந்த மரணங்களில் 7 பேர் சனிக்கிழமை (13) நடந்த விபத்துக்களால் உயிரிழந்ததாகவும் மற்ற 5 பேர் இந்த வார தொடக்கத்தில் நடந்த விபத்துக்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தவர்கள் என்றும் தெரிவித்தார். நேற்று பலியான 7 பேரில் 4 பேர் பாதசாரிகள் என்றும் ஏனைய மூவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.