தனது அவசர தேவையொன்றுக்கான பதிலை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு மாணவியொருவர் 185 தடவைகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போதிலும், அதிகாரிகளிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
- Advertisement -

நேற்று காலை முதல் மாலை வரை மேற்கொண்ட முயற்சியின் ஊடாக, மாணவியின்186வது தொலைபேசி அழைப்புக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.கல்வி அமைச்சின் உரிய பிரிவினரை தொடர்புகொள்வதற்கு 9 மணி மு தல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், 185 அழைப்புக்களை எந்தவொரு நபரும் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.
- Advertisement -
குறித்த மாணவி, மூன்று தொலைபேசிகளின் ஊடாக, கல்வி அமைச்சை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளதாக அறிய முடிகின்றது. எனினும், 186வது அழைப்பை ஏற்ற பெண் அதிகாரியொருவர், குறித்த மாணவிக்கு பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.