தம்பியின் கண்முன்னே அண்ணன் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று புத்தல பெல்வத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் மோட்டார் வாகனத்தை செலுத்திய இளைஞனான அண்ணன் உயிரிழந்துள்ளான்.
புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்வத்த சீனி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த வாகன விபத்தில் பசிந்து விஜேசேகர என்ற இளைஞனே உயிரிழந்தவனாவான். விபத்து இடம்பெறும் போது மோட்டார் வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பாடசாலை மாணவன் உயிரிழந்த இளைஞனின் சகோதரன் என தெரிவிக்கப்படுகிறது.