பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்களை கொண்டுவந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று படகுகளை கைப்பற்றியுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அறிவித்துள்ளது. கேரள கடல் எல்லையில் நேற்று அதிகாலை விழிஞ்சம் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 3 படகுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டு இருந்தன. அந்த படகுகளை சோதனை செய்த போது, அதில் ஹெரோயின்,ஹாபிஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
- Advertisement -

இந்த படகுகள் இலங்கையை சேர்ந்தவை என்பதும், போதைப் பொருட்களை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வருவதும் தெரியவந்தது. 3 படகுகளில் 19 பேர் இருந்தனர். இதற்கிடையே படகில் இருந்த 200 கிலோ ஹெரோயின், 60 கிலோ ஹாபிஸ் பைக்கட்டுகளை அவர்கள் கடலில் வீசினர். தொடர்ந்து 3 படகுகளையும் கடலோர பாதுகாப்பு படையினர் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.