இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்ககாரவின் மனைவி சம்பந்தப்பட்ட காணி கொள்வனவுக்காக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டமை குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- Advertisement -

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னர், குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கிராம சேவகரின் மகன் ஒருவரை கண்டியில் உள்ள உயர் பாடசாலையில் சேர்க்க சங்ககார தலையீடுகளை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்