கொழும்பின் பல பகுதிகளில் பெண்களின் தங்க சங்கிலிகளை பறிக்கும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- Advertisement -
பொரலெஸ்கமுவ, பிலியந்தல, பமுனுகம, அத்துருகிரிய மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் பிரிவில் பெண்களின் தங்க சங்கிலிகளை பறிக்கும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மஹரகம பொலிஸாரினால் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது
மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கையடக்க திருட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய பன்னிப்பிட்டிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.