வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ன்று மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டின் முற்றத்திலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரயவருகையில்,
- Advertisement -
உயிரிழந்த நபர் நேற்று இரவு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
- Advertisement -

சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
