24 மணிநேரத்திற்குள் மரணச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படவேண்டும் உட்பட பல்வேறு புதிய முடிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைத்துறை அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன நேற்று இரவு நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -

மரணச்சடங்கொன்றில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை வரையறுக்க தீர்மானித்துள்ளோம்.அத்துடன் மரணச்சடங்கு நிகழ்வை 24 மணிநேரத்திற்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் திருமணம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தற்போது 150 பேர்வரை அனுமதிக்கப்படுகின்றனர்.அந்த தொகையை 50 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இரவு கேளிக்கை விடுதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
- Advertisement -
இதேபோன்று கேளிக்கையாக கூடுபவர்கள் தொடர்பிலும் இரண்டொரு தினங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.