தனது ஒருவயது மகனுக்கும் மூன்று வயது மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அதை அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் மீட்கப்பட்டு தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் பொலநறுவையிலிருந்து தம்புள்ளை பகுதிக்கு வந்து தற்காலிகமாக வசித்து வருவதுடன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கார் சாரதியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நஞ்சை அருந்திய நிலையில் மூவரும் வீதியோரம் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொல்ல முயன்ற தாயார் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்