
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே இந்த அறவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.