மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13 ல் பொங்கல் ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியானது. படம் ரிலீஸ் ஆகி 1 மாதத்தை கடந்துவிட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 240 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.
மாஸ்டர் படத்தின் பாடல்கள் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. விஜய் ஆடிய வாத்தி கம்மிங் பாடல் போல அவர் பாடிய குட்டி ஸ்டோரி பாடலும் அனைவரையும் ஈர்த்தன.

குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ஒரு வருடம் ஆனதை ரசிகர்களும் #1YearOfKuttiStory என கொண்டாடி வருகிறார்கள்.
இப்படத்தை இணை இயக்குனராக பணியாற்றி லோகி தற்போது மாஸ்டர் என் வாழ்க்கையை மாற்றிய அனுபவம். மேதைகளிடமிருந்து கற்றுக்கொண்டதை பெருமையாக நினைக்கிறேன். குட்டி ஸ்டோரிக்காவும், மாஸ்டருக்காகவும் எங்களை வாழ்த்த்ய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.