அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வித் தகைமைகளை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நாடாளுமன்ற தகவல் சேகரிப்பு பிரிவு, இவர்களின் கல்வித் தகைமைகளை கோரியிருந்தது.
எனினும் அவற்றை வழங்க மறுத்துள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள், அரசியலமைப்பில் 90ஆவது பிரிவில், அப்படி எதுவும் கூறப்படவில்லை என்ற பதிலை வழங்கியுள்ளனர். இதேவேளை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது நாட்டின் குடியுரிமை வைத்திருக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.