பெந்தோட்டை விடுதியில் இராணுவச் சிப்பாய் தாக்கியதில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பிய சம்பத் எதிரிசிங்க என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். குருநாகல் – வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் குறித்த விடுதியில் இருந்த நிலையில் – குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பிய நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த தனிமைப்படுத்தலில் இருந்தவர், களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனிமைப்படுத்தலுக்காக சுமார் மூன்றரை இலட்சம் ரூபா செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
