திருச்சியில் பிரசாரத்துக்கு வந்த கனிமொழியை, கட்சியினர் கண்டுகொள்ளாமல் அனுப்பி வைத்தது சம்பவம் தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசுகளில், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக இருப்பவர் கனிமொழி. மாநில மகdghgtrளிர் அணி செயலர் மற்றும் துாத்துக்குடி, நாடாளுமக்ற உறுப்பினராகவும் உள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூட, தேர்தல் அறிக்கை குழு, கூட்டணி பேச்சுகளில், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
- Advertisement -

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதியில், வேட்பாளர் நேருவை ஆதரித்து, கனிமொழி பிரசாரம் செய்தார். பிரசாரம் முடிந்ததும், கனிமொழி வந்த வேனில் இருந்து நேரு இறங்கி கொண்டார். பின்னர் கனிமொழி பிரசார வேனும், அவருக்கு சொந்தமான கார் மட்டும், அவர் தங்கியிருக்கும் முதலியார் சத்திரம் சென்றது. கனிமொழி காருக்கு முன்னும், பின்னும் எந்த நிர்வாகியின் வாகனமும் செல்லவில்லை.
- Advertisement -
கருணாநிதி இருந்தபோது, கனிமொழி திருச்சி வந்தால், அவரது காருக்கு, முன்னும் பின்னும், தி.மு.க., நிர்வாகிகள், 10இற்கும் மேற்பட்ட கார்களில் வலம் வருவர். ஆனால், நேற்று முன்தினம் அப்படி யாரும் வரவில்லை. ஒரு சாதாரண நிர்வாகி போல் பிரசார வேனில் கனிமொழி 5 கி.மீ பயணித்து, கிழக்கு தொகுதியில் பிரசாரத்துக்கு சென்றுள்ளார். தி.மு.க வினர் தெரிவிக்கையில் ‘நட்சத்திர பேச்சாளர் வரிசையில் உள்ள கனிமொழிக்கு, கட்சி நிர்வாகிகள் சில கார்களில் சென்றாவது மரியாதை செய்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.