கொழும்பு – பஞ்சிகாவத்தையில் உள்ள சங்கராஜ மாவத்தையில் சமையல் எரிவாயு வெடித்தமையே தீ விபத்து ஏற்பட்டமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் பலபிட்டியில் வசிக்கும் 46 வயதுடைய குறித்த உணவகத்தின் சமையல்காரர் இறந்துள்ளதாக மரதானை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.