பசறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் 15 பேரின் உயிர் பறிபோன சம்பவத்திற்கு யார் பொறுப்பு ஏற்கவேண்டுமென்பது தொடர்பில் இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த விபத்து சம்பவிப்பதற்கான முழு பொறுப்பையும் வீதி அபிவிருத்தி திணைககளம், டிப்பர் சாரதி மற்றும் அப்பகுதி பொbvyygyhலிஸ் பிரிவு ஆகியோரே ஏற்க வேண்டும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று தெரிவித்தார்.
- Advertisement -

விபத்துக்கான 25வீத பொறுப்பை வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்ற 25வீத பொறுப்பை டிப்பர் சாரதி மற்றும் மீதமுள்ள வீதத்தை பொhgbghலிஸார் ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். “வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர், சில மாதங்களுக்கு முன்பு சாலையில் வழுக்கி விழுந்த பாறையை அகற்றியிருக்க வேண்டும். எதிர் திசையில் இருந்து வாகனம் ஓட்டிய டிப்பர் சாரதி, வண்டியை நிறுத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், அப்பகுதியில் உள்ள பொbhsguலிஸ் பிரிவு இதில் பெரும் பங்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.