ரயில் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒரு சில அலுவலக ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

ரயில் சேவையில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற தவறுகளின் நட்டத்தை, ரயில் ஊழியர்களிடமிருந்து அறவிடுகின்றமை, அசாதாரணமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.