யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
- Advertisement -
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று நண்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , 37 வயதான மகேஸ்வரன் மயூரன் என்பவரும் அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் என்பவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.