கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியினை சேர்ந்த கணவன், தனது கர்ப்பிணி மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (11.04.2023) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- Advertisement -
சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கணவன் மது போதைக்கு அடிமையானவர் எனவும், குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறுவதாகவும், இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.