முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு பிறக்கவுள்ளது.
இந்த நிலையில் பண்டிகையை முன்னிட்டு மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் பலகாரங்கள் தயாரிக்கும் காணொளியே தற்போது வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச ஆகியோர் இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்