தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வழங்க முடியும்.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.