மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வயது பாலகன் ஒருவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (8) காலை புட்டிப் பால் அருந்திக் கொண்டிருந்த இரண்டு வயதான குறித்த பாலகன், மூச்சு திணறல் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.
கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.about:blank இதன்போது, பாலகனின் தொண்டையில் பால் அடைத்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது